Tuesday, 19 June 2012

பல நேரங்களில் நாம் நம்மை சுற்றி உள்ளவர்கள் செய்யும் அன்றாட சாதனையை கண்டுகொள்வதில்லை , எங்காவது ஓரிடத்தில் கயிற்றின் மீது ஒரு சிறுமி நடந்து காட்டுவாள் அதை கண்டு ஒரு நாணயத்தை வீசி செல்வதுண்டு ஆனால் எப்பொழுதேனும் அப்படி நம்மால் கயிற்றில்  நடக்கமுடியும் என்று நினைத்ததுண்டா , அவ்வளவு ஏன் வீட்டு வேலைகளை பார்த்துக்கொள்ளும் பெண்களை போல் என்றாவது ஒரு நாள் நம்மளும் செய்ய முடியும் என்று எண்ணி பார்த்ததுண்டா ; இதில் வேலைக்கு சென்று வீட்டையும் கவனித்துக்கொள்ளும் பெண்கள் அதனினும் மேல் . அதற்காக ஆண்கள் சற்றும் குறைந்தவர்கள் அல்ல ( பெண்கள் சளைத்தவர்கள் அல்ல என்ற காலம் சென்று இன்று ஆண்கள் தங்களை நிலைநாட்டிக்கொள்ள வேண்டிய காலம் ஆகிவிட்டது ) 

சாதனை என்பது எட்டி பறிக்க  முடியாத கனி அல்ல , காலம் கடத்தாமல் , செய்ய வேண்டிய வேலைகளை இலக்கை நோக்கி செய்துக்கொண்டிருந்தாலே சோதனைகள் இல்லை சாதனை மட்டுமே வாழ்கையில் சின்ன சின்ன வேலைகளை கூட சந்தோஷமாக  செய்கின்ற  பொழுது அது மனசுக்கு ஏதோ யாராலும் செய்ய முடியாததை செய்த நிம்மதியை தருது , ஆனால்  இதை நினைத்து பார்த்து சந்தோஷப்படறதுக்கு யாருக்கும் நேரம் இல்லை . நாம்  செய்ய முடியாத ஒரு வேலையை யாரோ ஒருத்தர் செய்ய முடியுற பொழுது நமக்கு எப்பொழுதும் முதலில் தோன்றுவது பொறாமையாக  மட்டுமே உள்ளது , யாரோ ஒரு சிலர் மட்டுமே அதை மிகவும் முற்போக்கு சிந்தனையுடன் எடுத்துக்கொள்வதுண்டு , இது எனக்கும் பொருந்தும் எத்தனையோ வேளைகளில் , விஷயங்களில் பிறரை பார்த்து பொறமைப்பட்டதுண்டு . அப்படி யாரோ ஒருவர் செய்கையில் நாம் அதை மனமுவந்து பாராட்டுகையில் நம்மாளும் இதனை செய்திட முடியும் என்ற எண்ணமும் , நிச்சயம் நட்பு அடிப்படையிலான போட்டி மட்டுமே உருவாகின்றது , இது நிச்சயம் நம்மை உயர்த்துவது மட்டுமின்றி அடுத்தவரது உயர்விர்க்கும் வழிவகுக்கின்றது . 
ஒவ்வொரு தருணத்திலும் நம்மை நம்மே சந்தோஷப்படுத்தி கொள்வதாலும் , முடியும் என்று முயற்சிக்கும் பொழுதும் , தோல்வி கண்டு தளராது முன்னேறும் பொழுது மட்டுமே சாதனை புரிந்திட முடிகின்றது .

No comments:

Post a Comment