Monday, 18 June 2012

சாதனை


 பிறப்பில் இருந்து இறப்பு வரைக்கும் மனுஷன் எத்தனையோ சந்தோஷம் , கஷ்டம் , நஷ்டம் பார்க்க நேருது ; ஆனா அத்தனையையும் தாண்டி அடுத்த நாள் வாழ்கைக்கு வழிய பார்போம் என்ற நம்பிகையோட தான் ஒவ்வொரு நாளும் தூங்குறான் . இது ஏதோ வாழ்கை பத்தின லெக்ட்சர் கிடையாது , நீங்களும் நானும் பூமில இருக்க ஒவ்வொரு உயிருள்ள ஜீவனும் கடந்து வர்றது . சின்ன வயசுல பம்பரம் விடுறதுல ஆரம்பிச்சு , ஸ்கூல்ல முதல் அஞ்சு ரேங்க்குள்ள வர்றதோ , ஸ்போர்ட்ஸ்ல ஜெய்கிறதும் , ஏன் கூட படிக்கிற பிரென்ட் வாங்க நினைச்சத வாங்குறததுளையும், கல்யாணம் ஆனா பின்ன தனக்குன்னு ஒரு வீடு கட்டி குடி வர்றதுலயும் , வயசான பின்ன பேரன் பேத்திக்கு பென்ஷன் பணத்துல இருந்து பிடிச்சத வங்கித்தறதுளையும் சாதாரண ஒரு மனுஷனோட வாழ்க்கைல சந்தோசம் அவனுக்கு சாதனையா தான் அமையுது . 
அதென்ன மனுஷன்லயே சாதாரண மனுஷன் அசாத்தியமான மனுஷன் ?? பிறகும் பொது எல்லாத்துக்கும் ஒரு தலையும் ரெண்டு கையும் ரெண்டு காலும் தானே இருக்குது ( பொதுப்பிகப்பட்டகருத்து , அசாதாரணமான மனுஷன் இல்லையானு இந்த இடத்துல ரொம்ப யோசிக்க வேண்டாம் ) இன்னும் சொல்ல போனா அத்தனை உயிர் உள்ள ஜீவனும் அதோனோட இனத்தை போல தானே பொறக்குது , அப்படி இருக்கையில் எப்படி சிலரால் மட்டும் தன் மனதுக்கும் உடலுக்கும் அப்பாற்பட்ட காரியத்தை செய்ய முடியுது . 

இதை நாளுக்குள் நாள் நாம பார்க்குற ஒரு விஷயம் மூலமா விளக்கலாம் , எல்லா கிளாஸ்ளையும் எல்லா பசங்களும் ஒரே மாதிரி படிக்கிறது இல்ல , ஆனா அந்த கிளாஸ் டீச்சர் ஒவ்வொருத்தருக்கும் என்ன திறமை இருக்கு அத எப்படி வெளிக்கொண்டு வரலாம்னு பார்ப்பாங்க . உதரணத்துக்கு , ஒரு பையனுக்கு ஸ்போர்ட்ஸ்ல ஆர்வம் இருக்கும் , இன்னொருத்தனுக்கு இசைல இடுபாடு இருக்கும் , இன்னொரு பொண்ணுக்கு படிக்கிறதுல ஆர்வம் இருக்கும், இப்படி வேற வேற துறையில் இருக்க ஆர்வத்தை பொருத்து தக்க சமயத்துல , உரிய பயிற்சியோட , தனக்குள்ள ஒரு உந்துதல் ஏற்படுற மாதிரி ஒரு சப்போர்ட் இருக்கும் பொது தான் சாதரணம இருக்க மாணவன் அசாதாரணமான இடத்தை பிடிக்கிறான் . இது இன்றைய சூழ்நிலையில் எத்தனை ஸ்கூல்ல செய்றாங்கன்னு தெரியல. நான் படிக்கும் பொது நிச்சயம் அப்படி பட்ட டீச்சர் நிறைய பேரு இருந்தாங்க , ஒவ்வொருத்தரோட திறமைய வச்சு அவங்கள மேடை ஏத்தினாங்க ஆனா இன்னைக்கு எனக்கு தெரிஞ்சு எல்லா ஸ்கூல்ளையும் பத்தாவது , பனிரெண்டாவது ரிசல்ட் மட்டுமே எதிர்ப்பர்க்குறாங்க, அதுக்கு மட்டுமே மெனக்கெடுராங்க ( கல்வி நிச்சயம் வியாபாரமயமாக மாற்றப்பட்டது உலகம் அறிந்ததே) 

ஆக திறமை எல்லோர்குள்ளும் இருக்ககூடிய ஒன்று தான் , அதை எப்படி எங்கு எந்த வகையில் வெளிக்கொனர்கின்றோம் என்பது தான் சூத்திரமே. எத்தனையோ படங்கள் சாதனைய மையமா வச்சு வந்திருக்கு அதுல பசங்க , டோனி போன்ற படங்கள அழகா தெளிவா இயக்குனர்கள் சாதனைக்கு தேவை தெளிவான மனசும் , சிந்தனையும் , விடா முயற்சியும் , உந்துதலும் , பக்கபலமும் தான் .   எங்கேயோ ஒரு சில இடங்களில் தவிர ஏன் எப்பொழுதுமே சாதனை வயது முதிர்ந்த பின்னரே கொண்டாடபடுதுன்னு நெனச்சு பார்த்தது உண்டா?? அன்றைக்கும் சரி இன்றைக்கும் சரி ஒரு மனுஷன் கண்டுபிடிச்ச விஷயம் ரொம்ப ரொம்ப லேட்டா தான் அங்கீகரிக்க படுத்து ஒன்னு அவ அங்க தள்ளடுற வயச அடையும் போதோ அல்லது அவங்க காலமானது பிறகோ . கோடான கோடி மக்கள் இருக்கும் பொது மிக சொற்பமான மனிதர்களோட பெயர் மட்டுமே சாதனை பட்டியலில் இடம்  பெறுது அப்போ வேற யாருமே முயற்சி செய்யறதில்லையா அல்லது அங்கிகாரம் கிடைக்கிறது இல்லையா ???


                                                                                         முயற்சி தொடரும் .......           

2 comments:

  1. Superb Feel na every second in a mans life cant be felt.... but on reading this... it can b

    ReplyDelete
  2. உன் எல்லா முயற்சிகளிலும் வெற்றி பெறுவாயாக!! Good work Siva :)

    ReplyDelete